பிரபல பின்னணி பாடகியான எஸ். ஜானகி, கர்நாடக மாநிலம் மைசூரில் காலமானார். பிரபல சினிமா பின்னணி பாடகி எஸ்.ஜானகி. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார்.அவருக்கு தற்போது 88 வயது ஆகிறது. பதினாறு வயதினிலே படத்தில் இடம்பெற்ற செந்தூரப்பூவே செந்தூரப்பூவே, தேவர் மகன் படத்தில் வரும் இஞ்சி இடுப்பழகா பாடல்கள் மற்றும் தெலுங்கிலும், மலையாளத்திலும் தலா 1 பாடல்கள் என்று 4 தடவை தேசிய விருதுகள் பெற்றுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் எஸ்.ஜானகிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று திரும்பினார். அதன்பிறகு அவரது உடல் நிலைகுறித்து அடிக்கடி வதந்திகள் பரவியது. பிரபல திரைப்பட பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார். மூச்சுதிணறல் ஏற்பட்டு மைசூரில் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஜானகி உயிர் பிரிந்தது. மைசூருவில் உடல்நலக் குறைவால் அவர் உயிரிழந்ததாக அவரது பேத்தி தகவல் தெரிவித்துள்ளார். ஜானஜியின் மறைவிற்கு திரை உலகினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பாடகி எஸ்.ஜானகியின் ஒரே மகன் முரளி கிருஷ்ணா கடந்த ஜனவரி மாதத்தில் காலமானது குறிப்பிடத்தக்கது. 1938-ம் ஆண்டு ஆந்திர பிரதேசத்தில் பிறந்த ஜானகி 1957-ல் விதியின் விளையாட்டு படத்தில் பாடகியாக அறிமுகம் ஆனார். 17-க்கும் மேற்பட்ட மொழிகளில் பெரும்பாலான இசையமைப்பாளர்களுடன் பாடி உள்ளார் ஜானகி. 19-வது வயதில் பாடல்களை பாட தொங்கிய ஜானகி தமிழ்நாடு சார்பில் கலைமாமணி விருது பெற்றவர். எம்.எஸ்.விஸ்வநாதன், கே.வி.மகாதேவன், வி.குமார், சங்கர் -கணேஷ், இளையராஜ இசையில் பாடி உள்ளார் ஜானகி.ஏ.ஆர்.ரகுமான், தேவா, வித்யாசாகர், யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டோருடன் பணியாற்றி உள்ளார். 4 முறை தேசிய விருதுகளுடன் பல்வேறு மாநில அரசுகளின் விருதுகளையும் பெற்றுள்ளார். எம்.எஸ்.வி, இளையராஜா இசையில் பல அமரத்துவமான பல பாடல்களை பாடியுள்ளார். பல்வேறு மொழிகளில் சுமார் 48,000 பாடல்களை பாடி பல விருதுகளை வென்றவர் ஜானகி. குழந்தை குரல் முதல் வயதான பெண் குரல் வரை மாறுபட்டு பாடுவதில் திறமை மிக்கவர் ஜானகி. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/famous-playback-singer-s-janaki-passes-away




