அமெரிக்கா - ஈரான் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. இதை மீண்டும் மீண்டும் கூறுவதே அமெரிக்க அதிபர் ட்ரம்ப்தான். ஆனால், பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறுவதை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த நிலையில், அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதா என்பதை செய்தியாளர்களிடம் தெளிவுப்படுத்தியுள்ளார் ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி. ட்ரம்ப் - மசூத் பெசெஷ்கியான் கையெழுத்து"ரஷ்யாவுடன் கைகோர்க்கும் வடகொரியா; தென் கொரியாவிற்கும் ஆபத்து" - ஜெலன்ஸ்கி எச்சரிக்கை "நாங்கள் தற்போது அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. இடைத்தரகர்கள் மூலம் செய்திகள் மட்டுமே பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. இதை "பேச்சுவார்த்தை" என்று சொல்ல முடியாது, இது வெறும் "செய்தி பரிமாற்றம்" மட்டுமே. மீண்டும் பேச்சுவார்த்தைக்கான சூழலை உருவாக்க இடைத்தரகர்கள் இன்னமும் முயன்று கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் எங்கள் பார்வையில், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) செய்யப்பட்ட விதிமீறல்கள் முடிவுக்கு வந்து, அந்த ஒப்பந்தத்தில் தான் மீறியவற்றிற்கு அமெரிக்கா உரிய இழப்பீடு வழங்கும் வரை, மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கான சாத்தியக்கூறே இல்லை" முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/iran-denies-talks-with-us-says-only-messages-are-exchanged




