சென்னை: மேட்ரிமோனி இணையதளங்கள் மூலம் நடைபெறும் திருமண மோசடிகள் மற்றும் ஏமாற்று வேலைகளை தடுக்கும் வகையில், சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தமிழக அரசு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. ஆன்லைன் திருமண தகவல் இணையதளங்களில் பதிவேற்றப்படும் விவரங்களை முறையாக சரிபார்த்து, போலி தகவல்கள் மற்றும் மோசடிகளை தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு ஏற்கனவே அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, மேட்ரிமோனி இணையதளங்களில் வரன் தேடுபவர்களின் வயது, பிறந்த தேதி, முகவரி மற்றும் திருமண நிலை உள்ளிட்ட அடிப்படை விவரங்களை உரிய ஆவணங்களுடன் சரிபார்த்த பின்னரே இணையதளங்களில் பதிவேற்ற வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆதார் அங்கீகாரம் மேட்ரிமோனி இணையதளங்களை பயன்படுத்துவோரின் அடையாளத்தை உறுதி செய்வதற்காக, ஆதார் அங்கீகாரத்தை தன்னார்வ அடிப்படையில் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதன்படி, மேட்ரிமோனி தளங்களை பயன்படுத்துவோரின் அடையாளத்தை உறுதி செய்ய விரும்புபவர்கள் ஆதார் அங்கீகாரத்தை மேற்கொள்ளலாம். ஆதார் அங்கீகாரம் அளிக்க விருப்பம் இல்லாதவர்கள் ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் அல்லது பான் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை அடையாள சான்றாக வழங்கலாம். மேட்ரிமோனி இணையதளங்களில் போலி கணக்குகள் உருவாக்கப்படுவதை தடுப்பதுடன், திருமணம் தொடர்பான மோசடிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதாக அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/tamil-nadu-government-issues-new-order-to-prevent-marriage-scams-on-matrimony-sites




