தூத்துக்குடி, தூத்துக்குடி மாவட்டம், செக்காரக்குடி பகுதியில் கல்லூரி மாணவியை காதலிக்க வற்புறுத்தி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த சமையல்காரரை, சிங்கப்பெண் அதிரடிப்படை போலீசார் விரைந்து சென்று கைது செய்தனர். விவாகரத்து பெற்ற வாலிபர் தூத்துக்குடி மாவட்டம், செக்காரக்குடி பகுதியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் (வயது 31). சமையல் வேலை செய்து வரும் இவருக்கு திருமணமாகி, மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார். கல்லூரி மாணவியை காதலிக்க வற்புறுத்தி தொந்தரவு இந்த நிலையில், சொக்கலிங்கம் தனது பகுதியில் உள்ள கல்லூரி மாணவி ஒருவரை காதலிக்குமாறு வற்புறுத்தி, தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். மேலும், அந்த மாணவியிடம் ஆபாசமான செய்கைகளிலும் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை, இதுகுறித்து சிங்கப்பெண் அதிரடிப்படையின் கட்டணமில்லா உதவி எண்களான 1091-க்குத் தொடர்பு கொண்டு புகார் அளித்தார். சமையல்காரர் போக்சோவில் கைது அந்த புகாரைத் தொடர்ந்து, செக்காரக்குடி கிராமத்திற்கு விரைந்து சென்ற சிங்கப்பெண் அதிரடிப்படை சப்-இன்ஸ்பெக்டர் ஆரோக்கியஜென்சி தலைமையிலான போலீசார், சொக்கலிங்கத்தை கைது செய்தனர். பின்னர் அவர், தூத்துக்குடி புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். சொக்கலிங்கம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/college-student-in-love-trouble-singaphen-task-force-police-arrest-cook




