40 வயதைக் கடந்த பின் ஏற்படும் மிகப்பெரிய மனமாற்றம் - 'இனிமேலாவது நமக்கான வாழ்க்கையை வாழ வேண்டும்' என்பதுதான். கடமைகள், குடும்பப் பொறுப்புகள், கடன் தவணைகள் என கடந்த 20 வருடங்களாக ஓடிய ஓட்டத்தில் நம் இளமையையும் உழைப்பையும் தந்தாகிவிட்டது. ஆனால், 'இன்னும் எத்தனை காலம்தான் நாம் பணத்திற்காக உழைத்துக் கொண்டே இருப்பது?' என்ற கேள்வி எப்போதாவது உங்களை யோசிக்க வைத்திருக்கிறதா? பணம் என்பது வெறும் காகிதமோ, எண்களோ அல்ல; அது ஓர் உணர்வு. பலருக்கும் பணத்துடனான உறவு பயம், கவலை மற்றும் பாதுகாப்பின்மையால் மட்டுமே பிணைக்கப்பட்டுள்ளது. 'நாம் சம்பாதிக்காவிட்டால் என்னாவது?' என்ற அச்சமே நம்மை ஓய்வில்லாமல் ஓட வைக்கிறது. ஆனால், உண்மையான சுதந்திரம் என்பது நினைத்த நேரத்தில் விருப்பமான பணிகளைச் செய்வது, குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவது, மன அமைதியுடன் வாழ்வதுதான். இப்படிப்பட்ட அமைதியைத் தருவது ‘நிதி சுதந்திரம்’ (Financial Freedom) மட்டுமே! இத்தனை காலம் நீங்கள்தான் பணத்திற்காக உழைத்தீர்கள். இனி, உங்கள் பணம் உங்களுக்காக உழைக்க வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளில் நிதி சுதந்திரத்தை அடைவது சாத்தியமே! எப்படி என்று பார்க்கலாமா? Money பணத்தை உங்களுக்காக உழைக்க வைக்க சில வழிகள்: கூட்டு வட்டியின் சக்தி (Compounding): மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் முறையான SIP திட்டங்கள் மூலம் நீண்டகால நோக்கில் பணத்தைப் பெருக்கலாம். இதனால் உங்களின் சிறிய தொகை நாளை பெரிதாக வளர்ந்திருக்கும்! சைடு வருமானம் (Passive Income): பணத்தை நிலையான சொத்துக்கள், டிவிடெண்ட் தரும் பங்குகள் மற்றும் நிதி திட்டங்களில் முதலீடு செய்து மாதாந்திர வருமானம் பெறுவது. இதுவே உங்களின் பணத்தை உழைக்க வைப்பது. முறையான போர்ட்ஃபோலியோ பகிர்வு (Asset Allocation): பணத்தை ஒரே இடத்தில் தேக்காமல், பணவீக்கத்தை (Inflation) மிஞ்சும் வகையில் சரியான பல்வகை முதலீடுகளில் பகிர்ந்தளிப்பது. இதனால் ஒரு முதலீடு சரிந்தாலும், பிற முதலீடுகள் உங்கள் பணத்தைக் காத்து நிற்கும். கடினமாக உழைத்த நீங்கள், அமைதியான மற்றும் வளமான ஓய்வுக்காலத்துக்கு முற்றிலும் தகுதியானவரே! இந்த மாற்றத்தை உங்கள் வாழ்வில் கொண்டு வருவதற்கான அரிய வாய்ப்பு இதோ: Labham workshop sep 1 2026 வெபினார் அறிவிப்பு: தலைப்பு: 10 ஆண்டுகளில் நிதி சுதந்திரம் - உங்கள் பணத்தை உங்களுக்காக உழைக்க வைப்பது எப்படி? சிறப்பம்சங்கள்: 45-50 வயதில் இயர்லி ரிட்டைர்மென்ட் பெறுவது எப்படி? 2வது வருமானம் பெறுவது எப்படி? மியூச்சுவல் ஃபண்ட்ஸ் அடிப்படைகள். நாள்: செப்டம்பர் 13, 2026, ஞாயிறு நேரம்: காலை 11:00 - 12:30 மணி (IST) பேச்சாளர்: ஜித்தேந்தர், சேனல் மேனேஜர், ICICI Pru Asset Management Company இன்றே பதிவு செய்து உங்கள் நிதி சுதந்திர பயணத்தைத் தொடங்குங்கள்: முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/personal-finance/how-to-achieve-financial-freedom-in-10-years




