நகோயா, ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்காக 'கோஸ்டா செரீனா' என்ற பிரமாண்ட சொகுசு கப்பல் மிதக்கும் விளையாட்டு கிராமமாக பயன்படுத்தப்பட உள்ளது. ஆசிய விளையாட்டு போட்டி 20-வது ஆசிய விளையாட்டு போட்டி வருகிற 19-ந்தேதி முதல் அடுத்த மாதம் 4-ந்தேதி வரை ஜப்பானின் அய்ச்சி மற்றும் நகோயா நகரங்களில் நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள இந்தியா, சீனா, ஜப்பான், ஈரான், தென்கொரியா, பாகிஸ்தான் உள்பட 46 நாடுகளைச் சேர்ந்த 17 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் வருகை தர உள்ளனர். மிதக்கும் விளையாட்டு கிராமம் வழக்கமாக வீரர்கள் தங்குவதற்கு பல அடுக்கு குடியிருப்புகளுடன் கூடிய விசேஷ விளையாட்டு கிராமம் உருவாக்கப்படும். ஆனால் இந்த முறை ஜப்பான் விளையாட்டு கமிட்டி, கட்டுமான பொருட்களின் அதிக செலவு காரணமாக, விளையாட்டு கிராமம் குடியிருப்புகளை கட்டும் முடிவை கைவிட்டது. அதற்கு பதிலாக 'கோஸ்டா செரீனா' என்ற பிரமாண்ட சொகுசு கப்பலை மிதக்கும் விளையாட்டு கிராமமாக பயன்படுத்த ஏற்பாடு செய்துள்ளது. நகோயா துறைமுகம் 14 தளங்களை கொண்ட இந்த கப்பலில் நூற்றுக்கணக்கான அறைகள், ஓட்டல்கள், நீச்சல் குளங்கள், உணவகங்கள், மதுபான பார்கள், பிற பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த கப்பலில் 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் வீரர்கள் தங்குகிறார்கள். அதாவது 20 வகையான விளையாட்டு பிரிவைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக நகோயா துறைமுகத்துக்கு அருகில் நடைபெறும் போட்டிகளுக்குரிய வீரர்கள் இங்கு தங்குவார்கள். வில்வித்தை, 3x3 கூடைப் பந்து, சைக்கிளிங், ஜிம்னாஸ்டிக்ஸ், ஹேண்ட்பால், ஜூடோ, கபடி, துடுப்பு படகு, ரக்பி டென்னிஸ், பளுதூக்குதல், வலுதூக்குதல், வுசூ ஆகியவை இதில் அடங்கும். மற்றவர்கள் தற்காலிக கண்டெய்னர் பாணியிலான குடியிருப்புகள் மற்றும் அருகில் உள்ள ஓட்டல்கள், விடுதிகளில் தங்க வைக்கப்படுகிறார்கள். போட்டி தொடங்குவதற்கு 4 நாட்களுக்கு முன்பாக நகோயா துறைமுகத்தில் உள்ள கின்ஜோ பியர் பகுதியில் இந்த கப்பல் நிறுத்தப்படுகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/othersports/luxury-ship-turned-floating-athletes-village-for-asian-games




