சென்னை, உள்ளாட்சித் தேர்தல் சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளாட்சி தேர்தலில் தனித்துப் போட்டியிடுமா என்பதை, தேர்தலின் போதே முடிவு செய்வோம். இப்போது இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சிபிஎம்எல் ஆகிய கட்சிகள் இணைந்து ஒரு இடதுசாரி ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கியுள்ளோம். அது தேர்தலுக்கான குழு அல்ல. தமிழக நலனுக்காக போராடுவதற்காக உருவாக்கப்பட்ட குழு. தேர்தல் வருகிற நேரங்களில் இடதுசாரி கட்சிகள் அவரவர் கட்சியில் கூடி முடிவெடுப்போம். தேவை ஏற்படுகிறபோது ஒருங்கிணைந்து முடிவெடுப்போம். நாட்டை இடதுசாரிகள் பக்கம் திருப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த ஒருங்கிணைப்புக் குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தல், சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தேர்தல்களின் போது, அப்போதைய சூழலுக்கு ஏற்ப முடிவு எடுப்போம். ஒரு வேளை தனித்துப் போட்டியிடக் கூடிய சூழல் உருவாகும் எனில், தனித்துக்கூட கம்யூனிஸ்டுகளால் நிற்க முடியும். குதிரை பேரம் கம்யூனிஸ்டுகளுக்கு நாடு முழுவதும் அமைப்பு இருக்கிறது, எங்களின் பணியை மக்கள் அறிந்துள்ளனர். எனவே அத்தகைய சூழல் ஏற்பட்டால் நாங்கள் உள்ளாட்சித் தேர்தலில் தனித்தே நிற்போம். அதனை கட்சியே முடிவு செய்யும். தமிழ்நாட்டில் இடதுசாரி கட்சிகளின் பலத்தை அறிய வேண்டியது அவசியம். தமிழ்நாட்டில் எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரம் நடக்கிறது. இதனைத் தடுப்பது தமிழ்நாட்டின் நலனுக்கு நல்லது. இந்த கலாசாரம் வட மாநிலங்களிலிருந்து இங்குப் பரவியுள்ளது. கட்சித் தாவல் மற்றும் குதிரை பேரம் ஏற்புடையதல்ல. அது நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் பல கட்சிகள் இயங்குமுறையை நெருக்கடிக்கு உள்ளாக்கும். அரசியல் மீதே ஒரு வெறுப்புணர்வை உருவாக்கும். அவரவர் கொள்கைவழி நின்று அரசியல் செய்வதே கடமை என கருதுகிறோம். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/horse-trading-is-taking-place-in-tamil-nadu-m-veerapandian-alleges-sensationalism




