திருச்செந்தூர், திருச்செந்தூர் நகராட்சி பகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமாக மீன் வியாபாரம் செய்து வந்த கடைகளை, திடீரென ஆன்லைன் மூலம் ஏலம் விட நகராட்சி நிர்வாகம் எடுத்த முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெண் மீன் வியாபாரிகள் மீன்களுடன் சாலையில் இறங்கி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆன்லைன் ஏல அறிவிப்பு திருச்செந்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள மீன் அங்காடி கடைகளை ஆன்லைன் முறையில் ஏலம் விடுவதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. தாங்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இதே பகுதியில் வாழ்வாதாரத்தை நம்பி மீன் வியாபாரம் செய்து வருவதாகவும், ஆன்லைன் ஏல முறையால் தங்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்றும் பெண் வியாபாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர். சாலையில் இறங்கி போராட்டம் இந்த ஆன்லைன் ஏல அறிவிப்பை ரத்து செய்ய வலியுறுத்தியும், அந்த மீன் கடைகளை தங்களுக்கே வழங்கக் கோரியும், கோபமடைந்த பெண் மீன் வியாபாரிகள் தங்களின் மீன் கூடைகளுடன் திருச்செந்தூர் முக்கிய சாலைக்கு வந்தனர். தாங்கள் கொண்டு வந்த மீன்களை நடுரோட்டில் கொட்டி மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் தற்காலிகமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/thiruchendur-online-auction-row-women-fish-sellers-block-road




