திருவனந்தபுரம், கேரளத்தில் சில தினங்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் இருந்து பத்தனம்திட்டாவுக்கு ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் பத்தனம்திட்டா அருகே கோன்னி என்ற இடத்தில் சென்றபோது சாலையோரம் நின்ற மின்கம்பத்தில் மோதியது. இந்த விபத்தில் பயணிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். ஆனால் அந்த பஸ்சின் முன்பகுதி கண்ணாடி, முகப்பு விளக்குகள் உடைந்து பலத்த சேதமடைந்தது. இதையடுத்து பயணிகளை மாற்று பஸ்சில் அனுப்பி வைத்துவிட்டு சேதமடைந்த பஸ்சை கோன்னி அரசு பணிமனைக்கு எடுத்து சென்றனர். வீடியோ வைரல் இந்த நிலையில் தற்போது மோட்டார் வாகன அதிகாரிகளின் ஆய்வுக்கு பிறகு அந்த பஸ் பராமரிப்பு பணிக்காக மாவேலிக்கரை பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுமையாக உடைந்து போனதால் அதை ஓட்டி சென்ற டிரைவர் ராஜேஷ் பாதுகாப்பு கருதி 'ஹெல்மெட்' அணிந்து ஓட்டி சென்றார். பொதுவாக பஸ் டிரைவர்கள் 'சீட் பெல்ட்' அணிந்து ஓட்டுவது தான் வழக்கம். ஆனால் பஸ் டிரைவர் ஹெல்மெட் அணிந்து ஓட்டியதை அனைவரும் வியப்பாக பார்த்தனர். இதனை சிலர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தனர். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/driver-wearing-helmet-drives-damaged-bus-in-accident-video-goes-viral




