டெல்லியில் முன்னாள் மத்திய அமைச்சர் கரண்சிங், கவிஞர் வைரமுத்துவுக்கு ஞான பீடம் விருதை வழங்கி கவுரவித்தார். ஞானபீடம் விருது பெறும் 60-வது இலக்கியவாதியான வைரமுத்து, விழாமேடையில் பேசியபோது, ``சாகித்ய அகாடமி விருது, தேசிய விருதுகள், மாநில விருதுகள், பத்மபூஷன், பத்மஸ்ரீ எனப் பல விருதுகளை வாங்கி இருக்கிறேன். ஆனால் இந்த ஞானபீடம் விருது பெறும் பொழுது அதிக மகிழ்ச்சி கொள்கிறேன். எனக்கு கிடைத்த இந்த ஞானபீட விருதை தமிழ் சமூகத்துக்குப் பகிர்ந்து கொடுக்கிறேன். காகிதம் மற்றும் வாசகர்கள் இவர்கள்தான் ஓர் எழுத்தாளனுக்கு மிக முக்கியம். ஆனால் இவை இரண்டும் குறைந்து கொண்டே வருகின்றன. இந்தியாவில் இலக்கியத்திற்கான தனி பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும்” என்று அவர் கூரினார். வைரமுத்து தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில், ``24 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழுக்குக் கிடைத்துள்ள இந்த ஞானபீட விருது ஒவ்வொரு தமிழனுக்கும் காணிக்கையாக்கப்படுகிறது. இதனைத் தமிழர்கள் தங்களின் வீட்டு விருதாகக் கருதி கொண்டாட வேண்டும். பெற்றோர்களும் ஆசிரியர்களும் இந்த விருதின் பெருமையையும், தமிழின் அருமையையும் அடுத்த தலைமுறைக்குப் பிள்ளைகளிடம் கொண்டு சேர்க்க வேண்டும். ஞானபீட விருதுகளில் அதிகபட்சமாக இந்தி மொழி பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து இதுவரை மூன்று பேருக்கு மட்டுமே இந்த விருது கிடைத்துள்ளது. பிற மொழிகளைவிட தமிழ் குறைவாக விருது பெற்றுள்ளது என்பது மொழியின் பலவீனமல்ல. இதில் தமிழ்ப் படைப்புகள் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன என்ற கூற்றில் ஒரு பகுதி உண்மை இருந்தாலும், நாம் நம்மைச் சரியாகப் வெளிப்படுத்தவில்லை என்ற உண்மையும் இதில் அடங்கியுள்ளது. இன்னும் 10, 15 ஆண்டுகளில் தமிழில் ஞானபீடம் பெறக்கூடிய இளம் படைப்பாளிகள் பெருகுவார்கள். வைரமுத்து ரவீந்திரநாத் தாகூரின் 'கீதாஞ்சலி' ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பிறகே அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. தாகூருக்குப் பிறகு கடந்த 113 ஆண்டுகளில் இந்தியா பல உலக அழகிகளை உருவாக்கியுள்ளதே தவிர, ஏன் உலகக் கவிகளை உருவாக்கவில்லை? விருது என்று இருந்தால் அதற்கு எதிர்ப்புகளும் இருக்கத்தான் செய்யும். எதிர்ப்பு இல்லாவிட்டால் அது விருதே இல்லை. அந்த எதிர்ப்புகள் சரியா தவறா என்பதைப் படைப்பாளர்கள்தான் சொல்ல வேண்டும்" என்றார். 'விஜய்யைச் சந்திக்கவும் தயங்கமாட்டேன்.'- பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் அமைக்க வைரமுத்து கோரிக்கை முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/literature/vairamuthu-recipient-of-jnanpith-award-dedicated-it-to-tamil-people




