புதுடெல்லி, 20-வது ஆசிய விளையாட்டு போட்டி அடுத்த மாதம் (செப்டம்பர்) 19-ந்தேதி முதல் அக்டோபர் 4-ந்தேதி வரை ஜப்பானின் அய்ச்சி மற்றும் நகோயாவில் நடக்கிறது. இந்த போட்டிக்கு இந்தியா 492 பேர் கொண்ட குழுவை அனுப்புகிறது. இதற்கு மத்திய விளை யாட்டு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இவர்களில் 265 பேர் வீரர்கள், 227 வீராங்கனை கள். மொத்தம் 35 விளையாட்டுகளில் பங்கேற்கிறார்கள். ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றவரான நீரஜ் சோப்ரா, நீளம் தாண்டுதல் வீரர் ஸ்ரீசங்கர், டிரிபிள் ஜம்ப் வீரர் தமிழகத்தின் பிரவீன் சித்ரவேல், டெக்கத்லானில் கலக்கும் தேஜஸ்வின் சங்கர், 100 மீட்டர் தடை ஓட்ட மங்கை ஜோதி யர்ராஜி உள்பட 73 பேர் தடகளத்தில் இடம் பிடித்துள்ளனர். 3 ஆண்கள் மற்றும் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் அணியில் மொத்தம் 30 பேர் தேர்வாகியுள்ளனர். இதில் ஸ்ரேயாஸ் அய்யர், ஜஸ்பிரித் பும்ரா, சூர்யவன்ஷி, வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ஹர்மன்பிரீத் கவுர். ஸ்மிர்தி மந்தனா, ஷபாலி வர்மா உள்ளிட்டோரும் அடங்குவர். இதே போல் துப்பாக்கி சுடுதலில் மனு பாக்கர், ருத்ரான்க்ஷ் பட்டீல் உள்பட 30 பேரும், பேட்மிண்ட னில் பி.வி.சிந்து. லக்ஷயா சென் உள்பட 20 பேரும் இடம் பெற்றுள்ளனர். இது தவிர ஆக்கி. கபடி, மல்யுத்தம், குத்துச்சண்டை, டேபிள் டென்னிஸ், ஜூடோ, பளுதூக்குதல், வில்வித்தை, ஸ்குவாஷ், கோல்ப், வாள்வீச்சு உள்ளிட்ட பந்தயங்களிலும் நமது வீரர்கள் களம் காணுகிறார்கள். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/492-members-in-the-indian-squad-for-the-asian-games




