சென்னை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாலர் பெ. சண்முகம் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- நீட் வினாத்தாள் கசிவு ஊழலுக்குக் காரணமான கல்வி மாஃபியாக்கள் மீது நடவடிக்கை எடுக்க முதுகெலும்பு இல்லாத மோடி அரசு, அதற்கு எதிராக ஜனநாயக முறையில் போராடிய சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மற்றும் அபிஜித் திப்கே ஆகியோரைக் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. அடக்குமுறை நியாயமான எதிர்ப்புக் குரல்களை லத்திகள் மூலமும், அராஜக கைதுகள் மூலமும் நசுக்கப் பார்க்கும் இந்த ஜனநாயக விரோத, சர்வாதிகாரப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன். கல்வி மந்திரியின் தோல்வியை மறைக்க போராடுபவர்கள் மீது ஏவப்படும் இந்த கோழைத்தனமான அடக்குமுறைக்கு எதிராக, நாட்டின் ஒட்டுமொத்த ஜனநாயக சக்திகளும் வீதிக்கு வந்து போராட வேண்டும். ஜந்தர் மந்தரிலிருந்து எழப்போகும் இந்த உழைக்கும் வர்க்க இளைஞர்களின் புரட்சிப் பேரலை, உங்கள் அதிகாரச் சிம்மாசனத்தின் அஸ்திவாரத்தையே உலுக்கி தகர்க்கும்! அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்! தர்மேந்திர பிரதான் உடனே பதவி விலகு! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/cpim-strongly-condemns-the-dissolution-of-sonam-wangchuks-protest




