திருச்சி, திருச்சி மாவட்டத்தில் உள்ள இரண்டு கோவில்களில் மர்ம நபர்கள் மொத்தம் ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகைகள் திருடிச் சென்றனர். அம்மன் தாலி, உண்டியல் திருட்டு திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள காளிப்பட்டி தெற்கு தெருவில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் கோவிலின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 2 சவரன் தாலி மற்றும் உண்டியலை திருடிச் சென்றனர். மர்ம நபர்கள் கைவரிசை இதேபோல் சிங்களாந்தபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கியூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த சுமார் 5½ சவரன் தாலி, தங்க காசு மற்றும் உண்டியலை திருடிச் சென்றுள்ளனர். கோவில்களில் திருட்டு போன நகைகள் மதிப்பு ரூ.7 லட்சம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகார்களின் பேரில் சம்பந்தப்பட்ட போலீசார், இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/trichy-jewellery-worth-rs-7-lakh-stolen-from-temples




