சென்னை, கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ருக்மிணி வசந்த், நடிகர் நிவின் பாலியின் 51-வது திரைப்படத்தில் இணைந்துள்ளார். பிரபல கூட்டணி ‘சார்லி’, ‘நையாட்டு’ உள்ளிட்ட படங்களை தயாரித்து கவனம் பெற்ற மார்ட்டின் பிரக்கத் இப்படத்தை தயாரிக்கிறார். ‘ஜய ஜய ஜய ஜய ஹே’ படத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான நாஷித் இப்படத்தை இயக்குகிறார். மிகவும் சிறப்பு வாய்ந்த தருணம் படத்தில் இணைந்தது குறித்து ருக்மிணி வசந்த் தனது சமூக வலைதள பக்கத்தில், “நான் பல நாட்களாக தூரத்திலிருந்து ரசித்த ஒரு திரையுலகில் இணைவது மிகவும் சிறப்பு வாய்ந்தது” என்று தெரிவித்துள்ளார். ‘டாக்ஸிக்’ ருக்மிணி வசந்த், கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகி உள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன், நயன்தாரா, கியாரா அத்வானி, தாரா சுதாரியா மற்றும் ஹுமா குரேஷி உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாக உள்ளது. வருகிற 26-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/rukmini-vasanth-begins-shooting-with-nivin-pauly-for-np51




