சென்னை, சோமங்கலம் அருகே புதுப்பேர் பகுதியில் தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்ம நபர்களால் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் அருகே புதுப்பேர் பகுதியில் தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்ம நபர்களால் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பணம் கொள்ளை தொடர்பான வழக்கில் 2 தனிப்படைகள் அமைத்து மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். எச்சரிக்கை அலாரம் ஒலிக்கும் இணைப்பை துண்டித்துவிட்டு பணத்தை கொள்ளையடித்து தப்பியோடியது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. கேஸ் கட்டர் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து சுமார் ரூ.9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. கொள்ளை தொடர்பாக நிகழ்விடத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சமீப நாட்களாக தாம்பரம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நகை பறிப்பு, வீடு புகுந்து கொள்ளையடித்தல் சம்பவம் அதிகரித்து வந்த நிலையில் தற்போது தனியார் வங்கி ஏடிஎம்மையதிலிருந்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/bank-atm-machine-broken-and-money-looted-2-special-forces-formed




