Article complet
பிரிட்டனில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் தன் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் 6 பிரதமர்கள் ராஜினாமா செய்துவிட்டார்கள். 7-வது பிரதமருக்காக லண்டன் 10 டவுனிங் தெருவில் இருக்கும் பிரதமர் இல்லம் காத்திருக்கிறது. அந்த வீட்டில் வாசலில் 7-வது பிரதமரைப் பார்க்க ஒரு பூனையும் காத்திருக்கிறது. 10 டவுனிங் ஸ்ட்ரீட்டில் வசித்து வரும் சாம்பல் மற்றும் வெள்ளை நிற வரிகளைக் கொண்ட லேர்ரி பூனை, பல ஆண்டுகளாக பிரிட்டன் அரசியலின் மிக முக்கிய அங்கமாகவும், உலகளவில் அடையாளம் காணப்பட்ட ஒரு சின்னமாகவும் மாறியுள்ளது. லேர்ரி பூனை பிரிட்டனின் புகழ்பெற்ற 'பாட்டர்சி நாய் மற்றும் பூனைகள் காப்பகத்தில்' (Battersea Dogs & Cats Home) இருந்து கடந்த 2011-ம் ஆண்டு மீட்கப்பட்டு, எலிகளைப் பிடிக்க டவுனிங் ஸ்ட்ரீட் பிரதமர் இல்லத்திற்குள் அழைத்து வரப்பட்டது லேர்ரி பூனை. அன்று முதல் இன்று வரை டேவிட் கேமரூன், தெரசா மே, போரிஸ் ஜான்சன், லிஸ் ட்ரஸ், ரிஷி சுனக், தற்போது கீர் ஸ்டார்மர் உட்பட ஆறு பிரிட்டிஷ் பிரதமர்களின் ஆட்சிப் காலத்தைக் கடந்து, அங்கு ஒரு நிரந்தர அரசியல் அங்கமாகவே இப்போதும் அந்தப் பூனை அங்கேயே இருக்கிறது. உலகத் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் எனப் பிரதமர் இல்லத்திற்கு வரும் முக்கியப் பிரமுகர்களுடன் அடிக்கடி புகைப்படங்களில் தோன்றும் லேர்ரி பூனை, இப்போதும் பிரிட்டன் அரசியல் மாற்றத்தின் ஒரு மௌன சாட்சியாக வலம் வந்து கொண்டிருக்கிறது. பிரதமர் கீர் ஸ்டார்மரின் ராஜினாமா அறிவிப்பைத் தொடர்ந்து, இந்தப் பூனையின் பெயரில் இயங்கும் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கம், ``கீர் ஸ்டார்மரின் ராஜினாமாவை தலைமைப் பணியாளராக நான் ஏற்றுக்கொண்டேன்" என்றும், அடுத்த பிரதமருக்கான பந்தயத்தில் இருக்கும் ஆண்ட்ரூ பர்ன்ஹமைச் சுட்டிக்காட்டி நையாண்டியாகவும் பதிவிட்டுள்ளது. பிரிட்டன் அரசியலின் நிலையற்ற தன்மையைக் காட்டும் விதமாக, பதவிக் காலம் முடிவதற்குள் ராஜினாமா செய்த 5 பிரதமர்கள் மற்றும் தேர்தலில் தோல்வியடைந்த ரிஷி சுனக் ஆகியோரின் புகைப்படங்களைப் பகிர்ந்து, "அடுத்த விக்கெட்டும் சரிந்தது" என்று அந்த சமூக ஊடகப் பக்கத்தில் நகைச்சுவையாகப் பதிவிடப்பட்டுள்ளது. பிரிட்டன்: 10 ஆண்டுகளில் 6 பிரதமர்கள் - உலகை ஆண்ட நாட்டின் தற்போதைய நிலை என்ன? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Article complet — lien ci-dessous



