'லகான்', 'கஜினி', 'வீரம்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நடிகர் பிரதீப் ராவத் நேற்று காலமானார். ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார். இவருக்கு வயது 74. Pradeep Rawat கடந்த ஐந்து ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த பிரதீப் ராவத்திற்கு, நோய்யின் தாக்கம் குறைந்து குணமடைந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் புற்றுநோய் தீவிரமடைந்தது. இதைத் தொடர்ந்து, கடந்த சில வாரங்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது உடல்நிலை மோசமடைந்திருக்கிறது. இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளில் வில்லன் மற்றும் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்துப் பிரபலமானவர் பிரதீப் ராவத். தமிழில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த 'கஜினி' திரைப்படத்தில் வில்லனாக நடித்துப் பிரபலமானவர். Pradeep Rawat பிறகு 'வாத்தியார்', 'வீரம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துத் தமிழ் ரசிகர்களிடையே பரிச்சயமானவர் பிரதீப் ராவத். திரையுலகினர் பலரும் இவரது மறைவுக்கு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://cinema.vikatan.com/bollywood/actor-pradeep-rawat-passes-away-cancer-battle




