செனனை, புதிய வரிகளை விதிக்காமலும், கூடுதல் கடன் பெறாமலும் தமிழக அரசு ஆண்டுக்கு, 1.20 லட்சம் கோடி ரூபாய்க் கும் அதிகமான கூடுதல் நிதி வசதியை உருவாக்க வாய்ப்பு இருப்பதாக, அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட ஆலோசனை நிறுவனமான, 'கியர்னி' நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. வருவாய் வசூலை மேம்படுத்துவது மற்றும் அரசு செலவுகளை சரியாக நிர்வகிப்பதன் வாயிலாக, இதை எட்ட முடியும் என இந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ”தமிழக அரசு ஆண்டுக்கு, 1.20 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கூடுதல் நிதி வசதியை உருவாக்க வாய்ப்புள்ளது. * தமிழகத்தின் தனிநபர் மாத செலவினம், மஹாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களை விட அதிகமாக உள்ளது. ஆனால், மாநில மொத்த உற்பத்தி மதிப்புடன் ஒப்பிடும்போது, தமிழகத்தின் ஜி.எஸ். டி., வருவாய் இன்னும் குறைவாக உள்ளது. * தமிழக பொருளாதாரத்தில், சேவை துறையின் பங்கு, 53.60 சதவீதமாக உள்ளது. ஆனால், மாநிலத்தின் ஜி.எஸ்.டி., வசூலில், சேவை துறையின் பங்கு, 37.80 சதவீதம் என குறைந்து காணப்படுகிறது. வரி வரம்புக்குள் வரும் சேவைகளை முறையாக கண்காணித்து, ஜி.எஸ்.டி., வசூலை மேம்படுத்த வேண்டும். * மதுபான விற்பனையில், விலை அடிப்படையில் மாறுபட்ட கலால் வரியை நிர்ணயிப்பது, டாஸ்மாக் கொள்முதல் மற்றும் விற்பனையைனயை முழுமையாக கண்காணிப் பது ஆகிய நடவடிக்கைகள் வாயிலாகவும் வருவாயை அதிகரிக்கலாம். * பத்திரப்பதிவு மற்றும் முத்திரை தீர்வை வருவாயை உயர்த்த, வழிகாட்டி மதிப்பை தேவைக்கேற்ப மாற்றி அமைக்க வேண்டும். * 2025-26ல் இந்த வருவாய் தமிழகத்தின் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில், 0.72 சதவீதமாக இருந்த நிலையில், மஹாராஷ்டிராவில், 1.33 சதவீதமாக இருந்தது. * சுரங்கங்களில் எடுக்கப்படும் கனிமத்தின் அளவையும், அதற்கான ராயல்டி வசூலையும் துல்லியமாக கண்காணிப்பது மற்றும் மத்திய அரசின் நிதியுதவி திட்டங்களில் தமிழகத்துக்கு கிடைக்கக்கூடிய நிதியை முழுமையாக பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியம். * வருவாய் வசூலை மேம்படுத்தி, செலவுகளுக்கு சரியான முன்னுரிமை அளித்து செயல்பட்டால், வளர்ச்சி, நலத் திட் டங்கள் மற்றும் நிதி நிர்வாகம் ஆகிய மூன்றையும், ஒரே நேரத் தில் முன்னெடுக்கத் தேவையான வசதியை உருவாக்க முடியும். இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/opportunity-for-the-tamil-nadu-government-to-generate-additional-financial-resources-of-120-lakh-crore-annually




