சென்னை, ‘ஒன்ஸ்மோர்’ படத்தை தொடர்ந்து, சில்வர் ட்ரீ ஸ்டூடியோஸ் நிறுவனம் தனது முதல் தயாரிப்பாக இப்படத்தை உருவாக்குகிறது.இப்படத்தில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக பிரீத்தி பகதாலா நடிக்கிறார். அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படம் நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் பணிகள் தொடங்கியுள்ளன. ‘ஒன்ஸ்மோர்’ படத்தை தொடர்ந்து, சில்வர் ட்ரீ ஸ்டூடியோஸ் நிறுவனம் தனது முதல் தயாரிப்பாக இப்படத்தை உருவாக்குகிறது.இப்படத்தில் அர்ஜுன் தாஸுக்கு ஜோடியாக பிரீத்தி பகதாலா நடிக்கிறார். இதன் மூலம் அவர் கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். பிரபலங்கள் இணைப்பு கே.எஸ்.ரவிக்குமார், சரவணன், யோகி பாபு, பாலா சரவணன், அஷ்வினி நம்பியார், மோனா பெட்ரே, ஜெகன் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘புரியாத புதிர்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, ‘யாருடா மகேஷ்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ரஞ்சித் ஜெயக்கொடி இப்படத்தை இயக்குகிறார். பாப் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். விரைவில் தலைப்பு அறிவிப்பு இதுகுறித்து படக்குழுவினர் கூறுகையில், "எங்களது முதல் தயாரிப்பிலேயே வித்தியாசமான கதைக்களம் மற்றும் திறமையான கலைஞர்களுடன் களமிறங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. திறமையான கலைஞர்களுக்கு அடையாளம் தருவதுடன், ரசிகர்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு படைப்பை வழங்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம். ரசிகர்கள் விரும்பும் அனைத்து அம்சங்களும் இப்படத்தில் இடம்பெறும். திரையரங்கில் செலவிடும் டிக்கெட் பணத்திற்கு முழுமையான திருப்தியை அளிக்கும் வகையில் படத்தை உருவாக்கி வருகிறோம். அந்த வகையில் படப்பிடிப்பு பணிகள் கவனமாக நடைபெற்று வருகின்றன. படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும்" என்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/arjun-das-to-star-in-a-new-film-following-once-more



