சென்னை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி-I பணிகளுக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பல்வேறு பணியிடங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ள 126 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகள் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் வழங்கினார். இது தொடர்பாக வெளியான செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- 126 நபர்களுக்கு அரசு பணி தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச. ஜோசப் விஜய் இன்று (29.07.2026) தலைமைச் செயலகத்தில், மனித வள மேலாண்மைத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம், தொகுதி–I பணிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 78 நபர்களுக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 48 நபர்களுக்கும் பணிநியமன ஆணைகளை வழங்கினார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம், தொகுதி-I பணிகளுக்கு 28 துணை ஆட்சியர்கள், 7 துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், 19 உதவி ஆணையர்கள் (வணிக வரி), 15 உதவி இயக்குநர்கள் (ஊரக வளர்ச்சி), 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் மற்றும் 6 உதவி ஆணையர்கள் (தொழிலாளர்) என மொத்தம் 78 நபர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதில், தொழிலாளர் நலத்துறையின் உதவி ஆணையர் (தொழிலாளர்) பணியிடம் முதன்முறையாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தொகுதி-I-இல் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். ஆணைகளை வழங்கினார் முதல்-அமைச்சர் மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் மூலம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில், 40 உதவி பொறியாளர்கள், 6 சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் மற்றும் 2 நூலகர்கள் தரம்-II என மொத்தம் 48 நபர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதனடிப்படையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம், தொகுதி–I பணிகளுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 78 நபர்களுக்கும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 48 நபர்களுக்கும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் இன்று பணிநியமன ஆணைகளை வழங்கி, அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இந்நிகழ்ச்சியில், மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் த. சரத்குமார், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் வே.க. ராஜீவ், தலைமைச் செயலாளர் மு. சாய்குமார், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, மனித வள மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் சி. சமயமூர்த்தி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவர் அனுராக் மிஷ்ரா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/chief-minister-vijay-handed-over-appointment-orders-to-126-individuals




