சென்னை, தி.மு.க. எம்.பி. வில்சன் நிருபர்களிடம் கூறியதாவது:- உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தேடுதல் குழுவில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக் கையை 3-ல் இருந்து 5 ஆக உயர்த்தப்போவதாக தெரிவித்திருந்தார். பல்கலைக்கழகத்தின் பணியாளர்கள், பேராசிரியர்கள், துணைவேந்தர்கள் என அனைவரையும் நியமிக்க அரசியலமைப்பு சட்டத்தில் மாநில அரசுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. இது நம்முடைய மாநில உரிமை. இதை விட்டுவிடக்கூடாது. கடந்த 5 ஆண்டுகளாக மாநில உரிமைக்காக ஐகோர்ட்டில் இருந்து சுப்ரீம் கோர்ட்டு வரைக்கும் சென்று நாங்கள் வென்று வந்திருக்கிறோம். அதற்கு மாறாக யு.ஜி.சி. உறுப்பினர்களை குழுவில் சேர்ப்பது மூலம் நமது பல்கலைக்கழகங்களின் அதிகாரம் மத்திய அரசு வசம் போய் விடும். இவ்வாறு அவர் கூறினார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/ugc-representative-must-not-be-included-in-the-vice-chancellor-search-committee-dmk-mp-wilson




