சமீபத்திய பேட்டி ஒன்றில் கங்கை அமரன், வெங்கட் பிரபுவின் அடுத்த படம் தொடர்பாகப் பேசிய விஷயம் இணையத்தில் வைரலானது. கங்கை அமரன், அந்த பேட்டியில் நடிகர் சிவகார்த்திகேயனைத்தான் குறிப்பிட்டுப் பேசுகிறார் என சமூக வலைதளப் பக்கங்களில் பகிரப்பட்டன. இந்தத் தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இயக்குநர் வெங்கட் பிரபு விளக்கமளித்திருக்கிறார். Gangai Amaran இது தொடர்பான பதிவில் அவர், "சிவகார்த்திகேயன் எப்போதும் எனக்கு ஒரு நல்ல நண்பர்; என் சொந்தச் சகோதரர் போன்றவர். இப்போது அவரைப் பற்றிப் பல ஊகங்களும் சர்ச்சைகளும் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஒரு தந்தையாக, தன் சொந்த மகனின் படம் தாமதம்காகும்போது அவருக்கு ஆதங்கமும் மனவருத்தமும் ஏற்படுவது இயல்புதான். அவருக்கு இந்த விவகாரத்தின் முழுப் பின்னணியும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் நான் அவரை எந்தக் குறையும் சொல்ல மாட்டேன். நான் என்னுடைய வேலை விஷயத்தில் மிக அமைதியாகச் செயல்படக்கூடிய ஒருவன். எனது தொழில் தொடர்பான விஷயங்களை அவர் உட்பட யாருடனும் நான் விரிவாக விவாதிப்பதில்லை. சில பல காரணங்களால் அந்தத் திட்டம் தொடங்க முடியாமல் போனது. அவ்வளவுதான். இதில் எங்களுக்குள் எந்தவிதக் கசப்புணர்வும் இல்லை. காலம் கனிந்து, ஒரு நல்ல கதைக் களம் அமையும் போது, மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து பணியாற்ற நான் நிச்சயமாக விரும்புவேன். எனவே தயவுசெய்து, இந்தச் சர்ச்சைகளுக்கெல்லாம் இதோடு முற்றுப்புள்ளி வையுங்கள். நான் என்னுடைய அடுத்த படத்தின் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளேன்" எனக் குறிப்பிட்டுப் பதிவிட்டிருக்கிறார். Sir, we are family. Idhuku poi neenga serious-ah reply pannitu irukeenga! Thank you so much for your wishes, sir, and my best wishes for your next project Sir, I’ve told you this before, and I’m saying it again - I’ll always be a VP fan. Waiting to collaborate with you… — Sivakarthikeyan (@Siva_Kartikeyan) September 28, 2026 வெங்கட் பிரபுவின் பதிவுக்கு சிவகார்த்திகேயனும் பதில் பதிவு போட்டிருக்கிறார். அந்தப் பதிவில் அவர், "சார், நாம் ஒரே குடும்பம். இதற்கு நீங்கள் இவ்வளவு சீரியஸாக ரிப்ளை தந்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களது வாழ்த்துகளுக்கு ரொம்பவே நன்றி சார். உங்களுடைய அடுத்த திரைப்படத்திற்கும் என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துகள்! இதை நான் உங்களுக்கு முன்னாடியும் சொல்லியிருக்கேன், இப்பவும் சொல்றேன். நான் எப்போதும் உங்களுடைய தீவிரமான ஃபேன்! சீக்கிரமாகவே உங்களுடன் இணைந்து பணியாற்றக் காத்திருக்கிறேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://cinema.vikatan.com/kollywood/sivakarthikeyan-venkat-prabhu-gangai-amaran-controversy-clarification




