பழனி, பழனி கோவில் தண்டபாணி மடத்துக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை தனிநபர்கள் பெயருக்கு முறைகேடாக பதிவுசெய்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இதுதொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் முழுமையாக ஆய்வு செய்து உண்மை நிலையை அறிய, பதிவுத்துறை சார்பில் 3 பேர் கொண்ட உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தக்குழுவில் கூடுதல் பதிவுத்துறைத் தலைவர், உதவி பதிவுத்துறைத் தலைவர் மற்றும் ஒரு மாவட்டப் பதிவாளர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழுவினர் பத்திரப்பதிவு நடைபெற்ற நாளில் பணியில் இருந்த சார்பதிவாளர், விடுப்பில் சென்ற சார்பதிவாளர், மாவட்ட பதிவாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்டோரிடம் விரிவான விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விசாரணை முன்னதாக பழனி முருகன் கோவிலுக்கு சொந்தமானதாக கூறப்படும் நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்ததாக எழுந்த புகாரில், ஏற்கனவே சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், அதே விவகாரத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் மாவட்ட பதிவாளர் சசிகலாவையும் தமிழக பதிவுத்துறை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. சிபிசிஐடி போலீசார் ஜஸ்டின் மணிகண்டன் உள்பட பல்வேறு நபர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். அறக்கட்டளை உறுப்பினர் இந்த நிலையில், விழுப்புரத்தை சேர்ந்த முருகதாஸ் என்பவர் வீட்டுக்கு சீல் வைத்து சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். முருகதாஸ் வீட்டில் இருந்து 50 க்கும் மேற்பட்ட ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், வீட்டைபூட்டி சிபிசிஐடி போலீசார் சீல் வைத்தனர். முருகதாஸ் வீட்டில் யாரும் இல்லாத நிலையில், ஆவணங்களை பறிமுதல் செய்து சிபிசிஐடி போலீஸ் சீல் வைத்துள்ளது. பழனி கோயில் அறக்கட்டளை உறுப்பினராகவும் அரசுப்பள்ளி ஆசிரியராகவும் முருகதாஸ் இருந்து வருகிறார் முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/palani-land-fraud-case-house-of-murugadass-from-villupuram-sealed




