சென்னை, ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் கிரிக்கெட் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:- மனமார்ந்த பாராட்டு ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் கிரிக்கெட் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கும், அதில் இடம்பிடித்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை கமலினிக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒவ்வொரு போட்டியிலும் தன்னம்பிக்கையுடன் விளையாடி, நெருக்கடியான தருணங்களிலும் சிறப்பாகச் செயல்பட்டு, இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தியிருக்கும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வெற்றிப் பயணம் மேன்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/asian-games-ttv-dinakaran-congratulates-tamil-nadu-player-kamalini




