ஜகார்தா, இந்தோனேசியாவில் நேற்று சக்திய்வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு இந்தோனேசியா. இந்நாட்டில் ஆயிரக்கணக்கான தீவுகள் உள்ளன. நிலநடுக்கம் இந்நிலையில், இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணம் தெலுக் நாகா பகுதிக்கு வடக்கு-வடகிழக்கே 115 கி.மீ தொலைவை மையமாக கொண்டு நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 4.23 மணிக்கு ஏற்பட்ட இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகியுள்ளது. கடலுக்கு அடியில் 358 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் தெலுக் நாகா நகரில் உள்ள கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன. அதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/powerful-earthquake-in-indonesia-5




