விருதுநகர், சாத்தூர் அருகே நென்மேனி லொயோலா இஞ்ஞாசியார் ஆலய 137 வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தைத் தொடர்ந்து திருப்பலியும் மறையுறையும் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக ஜூலை 30-ம் தேதி வியாழக்கிழமை மாலை 6.00 மணிக்கு ஆலய வளாகத்தில் நற்செய்தி கூட்டமும், தொடர்ந்து 8.30 மணிக்கு திருப்பலியும் மறையுறையும் நடைபெறுகிறது. அன்று நள்ளிரவு 11:30 மணிக்கு ஆடம்பர திருவிழா கூட்டு திருப்பலியும் மறையுறையும் நடைபெறுகிறது. தேர் பவனி 31ஆம் தேதி வெள்ளிக்கிழமை தேர் பவனி நடைபெறுகிறது. அதிகாலை 3.00 மணிக்கு புனித இஞ்ஞாசியார் திரு உருவம் வண்ண மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட மின் அலங்கார தேரில் எழுந்தருளியதும், தேர் பவனி நடைபெறுகிறது. காலை 7.00 மணிக்கு திருப்பலியும் மறையுறையும் நடைபெறுகிறது. தொடர்ந்து 10.30 மணிக்கு நன்றி திருப்பலி நற்கருணை ஆசீருடன் கொடியிறக்கம் செய்யப்பட்டு திருவிழா நிறைவடைகிறது. திருவிழாவை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக வருகிற ஜூலை 30, 31 ஆகிய நாட்களில் விருதுநகர், சாத்தூர், அருப்புக்கோட்டை, கோவில்பட்டி ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/devotional/st-ignatius-church-festival-begins-in-nenmeni-near-sattur




