ரோம், உலகக் கோப்பை கால்பந்தில் 4 முறை பட்டம் வென்ற அணியான இத்தாலி, தொடர்ந்து 3 முறை உலகக் கோப்பை போட்டிக்கு தகுதி பெறவில்லை. தகுதி சுற்றோடு வெளியேறி இருக்கிறது. இந்த நிலையில் 2030-ம் ஆண்டு உலகக் கோப்பையை குறி வைத்து இத்தாலியின் புதிய தலைமை பயிற்சியாளராக ராபர்ட்டோ மன்சினி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். 2021-ம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பை வென்ற போது அந்த அணியின் பயிற்சியாளராக இருந்த முன்னாள் வீரரான ராபர்ட்டோ மன்சினி 2023-ம் ஆண்டு திடீரென விலகினார். தற்போது 3 ஆண்டுக்கு பிறகு அவரே இந்த பொறுப்புக்கு சரியான நபராக இருப்பார் என கூறி மறுபடியும் அவரை இத்தாலி கால்பந்து சம்மேளனம் இழுத்துள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/football/mancini-reappointed-as-italy-team-coach




