தென்காசி, பூலித்தேவனின் 311-ஆவது பிறந்த நாளையொட்டி தென்காசி மாவட்டம், நெற்கட்டும்செவலில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:- புகழாரம் இந்திய விடுதலைக்காகத் தெற்கிலிருந்து வீறுகொண்டு எழுந்த நெற்கட்டான் செவலின் மாவீரர், இளம் வயதிலேயே துணிச்சலோடு “வெள்ளையனே வெளியேறு”என வீர முழக்கமிட்டதோடு, போர்க்களத்தில் வீழ்த்தவே முடியாத தீரராகத் திகழ்ந்து, வீரத்தில் மட்டுமல்லாமல் இறைபணியிலும் சிறந்து விளங்கிய மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் பிறந்தநாளில், அவர்தம் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன். தென்காசி மாவட்டம், 'நெற்கட்டும்செவல்' என்ற இடத்தில் அமைந்துள்ள மாமன்னர் பூலித்தேவன் அவர்களுடைய திருஉருவச்சிலைக்கு, அதிமுக சார்பில் தலைமைக் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/puli-thevars-birth-anniversary-edappadi-palaniswami-pays-tribute




