சென்னை: வரும் 2027-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.2 லட்சத்தை எட்டும் என்று தமிழ்நாடு தங்கம் மற்றும் வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். சென்னையில் 3 நாட்கள் நடைபெறும் நகை வர்த்தக கண்காட்சியில் அவர் பேசியதாவது: நகைகள் கொள்முதல் இந்த கண்காட்சியில் தென்னிந்தியாவைச் சேர்ந்த சுமார் 15 ஆயிரம் நகைக்கடை வியாபாரிகள் பார்வையிட்டு, நகைகளை கொள்முதல் செய்ய உள்ளனர். இதன் மூலம் சுமார் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 18, 14 மற்றும் 9 கேரட் தங்க நகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் இந்த நகைகளை வாங்கி பயன்பெறலாம். இவற்றின் சந்தை மதிப்பு குறைவதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/gold-prices-are-going-up-sovereign-to-touch-rs-2-lakh-reports




