திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கத்தின் 2-ம் மாநில மாநாட்டின் பொதுமாநாடு நடைபெற்றது.இதில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த் கலந்து கொண்டு பேசியதாவது:-உலகத்திலேயே தூய்மை பணியாளர்கள் போல் சேவை செய்திட யாரும் இல்லை. யாரும் இருக்க மாட்டார்கள். கைதட்டுவதற்காக இதை சொல்லவில்லை. தூய்மை பணியாளர்களுக்கு கடந்த காலத்தில் நலத்திட்டங்களை செய்திட ஏன் மனசு வரவில்லை என்று தெரியவில்லை. ஆனால் இப்போது முதல்-அமைச்சர் விஜய் அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலிப்பார்.தலைவர் முகத்துக்காகத்தான் அனைத்து மக்களும் ஓட்டு போட தயாராக இருக்கிறார்கள் என்று சொல்லி இன்று வெற்றி பெற்று இருக்கிறோம். சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஒரு போதும் தவறு செய்ய மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறோம். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/there-is-no-longer-any-room-for-the-notion-that-work-gets-done-only-if-money-is-paid-minister-anand




