சென்னை, விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- விவசாயிகளுக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அண்மையில் அறிவித்துள்ளது. “பிரதான் மந்திரி கிசான் மாந்தன் யோஜனா “என்கிற இந்த திட்டம் 60 வயது நிரம்பிய விவசாயிகளுக்கு மாதம் ரூபாய் 3000 ஓய்வு ஊதியம் வழங்கும் திட்டம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை சிறுகுறு விவசாயிகள் மட்டுமே பயன்பெறுகிற திட்டமாக அரசு அறிவித்துள்ளது. 2 ஹெக்டர் நிலத்திற்கு கீழ் உள்ள விவசாயிகள் மட்டுமே இதில் இணையலாம் என வரன்முறை உள்ளதால் இதர விவசாயிகள் இத்திட்டத்தில் இணைய முடியாது. இத்திட்டத்தில் 18 வயதில் இருந்து 45 வயதுக்குள் தான் இணையமுடியும். இந்தத் திட்டத்தில் இணைந்த பின் மாதம் ரூபாய் 55 முதல் 200 ரூபாய் வரை. வயதுக்கு ஏற்ப, இணைவோர் வைத்துள்ள வங்கி கணக்கிலிருந்து பிரீமிய தொகையை ஒவ்வொரு மாதமும் அரசு எடுத்துக் கொள்ளும். 60 வயது நிரம்பிய உடன் ஒவ்வொரு மாதமும் ரூ.3000 இவர்களின் வங்கி கணக்குக்கு அனுப்பப்படுமாம். இத்தொகையை பெறும் விவசாயி இறந்தால், இவரது மனைவிக்கு ரூ 1500 வழங்கப்படும் என இந்த திட்டத்தை கொண்டு அரசு அறிவித்து பிரசாரம் செய்து வருகிறது. பாகுபாடான திட்டம் இயற்கையோடு போராடி எவ்வகை இழப்பு ஏற்பட்டாலும், ஊருக்கு உணவளிக்கிற விவசாயிகளுக்கு 60 வயது நிரம்பிய அனைவருக்கும் நாட்டின் பாதுகாப்பான, நிம்மதியான வாழ்க்கை கிடைக்க பெற முதியோர் வாழ்க்கை நலிவு, ஓய்வூதியமாக மாதம் ரூபாய் 10,000 கொடுக்கப்பட வேண்டும் என 20 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டங்கள் இந்தியா முழுதும் நடந்து வருகிறது. குறிப்பாக ஐக்கிய விவசாயிகள் முன்னணியால் 14 மாதங்களுக்கு மேல் டெல்லி உள்ளிட்ட இந்தியா முழுதும் நடைபெற்ற போராட்டங்களின் ஒரு முக்கிய கோரிக்கை இது. இக்கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றும் என எழுதிக் கொடுத்துவிட்டு ஏமாற்றிய பிரதமர், மத்திய பாஜக அரசு தற்பொழுது இந்த பாகுபாடான திட்டத்தை அறிவித்துள்ளது. எந்தத் தொகையும் விவசாயிகளிடம் பெறாமல், 60 வயது நிறைந்த சிறு, குறு, பெரு விவசாயிகள் அனைவரையும் அரசு பாதுகாக்கும் என்ற நிலையில் அரசே இந்த தொகையை வழங்க வேண்டுமே தவிர, சிறு சேமிப்பு திட்டம் போல காப்பு தொகை பெறுவதும், விவசாயிகளிடையே பாகுபாடு காட்டும் நிலையில் இத்திட்டத்தை அமல்படுத்துவது நம்பிக்கை மோசடியாகும். இது முதியோர் ஓய்வூதியம் அல்ல. விவசாயிகள் செலுத்தும் தொகைக்கு ஏற்ப வழங்கும். சேமிப்பு திட்டமாகத்தான் மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே விவசாயிகளின் நெடுநாளைய கோரிக்கையை ஏற்று எந்த நிபந்தனையும் இன்றி முதியோர் ஓய்வூதியம் ரூபாய் 10 ஆயிரமாக உயர்த்தி மத்திய மற்றும் மாநில அரசு இணைந்து வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது. முன்பே அமல்படுத்தி வருகிற மேலும் இரண்டு திட்டங்களை மத்திய அரசு சாதனையாக இப்போது சொல்லி உள்ளது. கிசான் சமான் நிதி திட்டம் இது கடந்த ஆறு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தில் பெரும் மோசடியில் எண்ணற்ற விவசாயிகளுக்கு இந்த நிதி உதவி கிடைக்கவில்லை. குத்தகை சாகுபடியாளர்களுக்கு கிடையாது. நில உடமை உரிமை இருந்தும், ஆவணம் செய்து கொள்ளாதோர்கள் சுமார் 28 சதவீதம் விவசாயிகளுக்கு வருடம் ரூபாய் 6 ஆயிரம் மத்திய அரசு கொடுக்கவில்லை. கிசான் கிரெடிட் கார்டு நில உரிமை பதிவு ஆவணம் உள்ளவர்களுக்கு மட்டும் வங்கியின் மூலம் கடன் கிடைப்பதற்கான வசதியாகும் இவைகளைத் தான் மத்திய அரசு பிரசாரம் செய்து வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/farmers-should-be-given-rs-10-thousand-pension-tamil-nadu-farmers-association-insists




