கோயம்புத்தூர், கோவை அருகே சுற்றுலா செல்ல பெற்றோர் அனுமதிக்காததால் மனமுடைந்த கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அனுமதி மறுப்பு கோவையை அடுத்த வேடப்பட்டி குரும்பம்பாளையத்தை சேர்ந்தவர் மயில்சாமி (54 வயது). இவருடைய மகள் பூர்வஜா (20 வயது). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவருடன் படித்து வரும் மாணவ-மாணவிகள் பெங்களூருவுக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். இதையடுத்து பூர்வஜா தனது பெற்றோரிடம் சென்று பெங்களூருவுக்கு சுற்றுலா செல்ல அனுமதி கேட்டார். அதற்கு அவர்கள் அனுமதி மறுத்ததாக தெரிகிறது. விபரீத முடிவு இதனால் மனமுடைந்த பூர்வஜா, கோபத்தில் தனது அறைக்கு சென்று கதவை பூட்டினார். நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது தாய், அறையின் கதவை பலமுறை தட்டினார். ஆனால் கதவை திறக்கவில்லை. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு மின்விசிறியில் பூர்வஜா தூக்கில் தொங்கியது தெரிய வந்தது. உடனடியாக அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். போலீசார் விசாரணை பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே பூர்வஜா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/parents-deny-trip-college-student-dies-by-suicide




