மான்செஸ்டர், டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. 2-வது டி20 போட்டி இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் டி20 போட்டி மழை காரணமாக பாதியிலேயே ரத்துசெய்யப்பட்ட நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இளம்புயல் வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியில் இடம்பெற்றார். சஞ்சு சாம்சனுக்கு அணியில் இடமில்லை. சூர்யவன்ஷி ஏமாற்றம் தொடக்க ஆட்டக்காரர்களாக வைபவ் சூர்யவன்ஷியும், அபிஷேக் சர்மாவும் களமிறங்கினர். சூர்யவன்ஷி 14 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து இஷான் கிஷனுடன் சேர்ந்து அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்த நிலையில், அபிஷேக் சர்மா 43 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் தன் பங்குக்கு 37 ரன்கள் எடுத்தார். இஷான் கிஷன் 49 ரன்கள் எடுத்த நிலையில், அரைசதத்தை தவறவிட்டார். 190 ரன்கள் இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து தரப்பில் சாம் கரன் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/sports/cricket/2nd-t20-india-sets-a-target-of-191-runs-for-england




