சென்னை, தமிழ் திரையுலகில் இளம் இசையமைப்பாளராக கவனம் பெற்று வரும் சாய் அபயங்கர், தற்போது முன்னணி நடிகர்களின் 12 திரைப்படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார். விஜய் சேதுபதி முதல் தனுஷ் வரை. சாய் அபயங்கர் இசையமைக்கும் படங்களின் பட்டியலில் விஜய் சேதுபதியின் ‘பத்தா’, தனுஷின் ‘ஓம்’ மற்றும் ‘தமிழ் முருகன்’ ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், சூர்யா 48, பிரதீப் ரங்கநாதனின் பிஆர்எஸ்1(PRS01), ராகவா லாரன்ஸின் ‘பென்ஸ்’, கார்த்தியின் ‘மார்ஷல்’ ஆகிய படங்களுக்கும் அவர் இசையமைக்கிறார். அல்லு அர்ஜுன், சிவகார்த்திகேயன் இதுதவிர, அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’, துருவ் விக்ரமின் அடுத்த படம், சிவகார்த்திகேயனின் அடுத்த படம் ஆகியவற்றிலும் சாய் அபயங்கர் இசையமைக்கிறார். அதேபோல், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து - சிம்பு கூட்டணியில் உருவாகும் அடுத்த படம் மற்றும் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் - சிம்பு கூட்டணியில் உருவாகும் அடுத்த படம் என மேலும் 2 படங்களும் அவரது கைவசம் உள்ளன. பிஸியான இசையமைப்பாளர் இவ்வாறு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் படங்கள் உட்பட மொத்தம் 12 திரைப்படங்கள் சாய் அபயங்கரின் கைவசம் உள்ளன. இதன் மூலம், குறுகிய காலத்திலேயே முன்னணி இசையமைப்பாளர்களின் வரிசையில் கவனம் பெற்றுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/12-films-leading-heroes-sai-abhyankar-the-busy-music-composer
