தூத்துக்குடி, லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. லாரி - ஆம்னி பேருந்து மோதி விபத்து பெங்களூரில் இருந்து திருச்செந்தூர் நோக்கி ஆம்னி பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது தூத்துக்குடி மாவட்டம் எட்டையப்புரம் சாலையில் செல்லும்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து முன்னால் சென்றுகொண்டிருந்த தண்ணீர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில், பேருந்தின் முன்பக்கம் முழுவதும் சேதமடைந்தது. இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த 6 பேரை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓட்டுநர் கைது இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து பேருந்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/omni-bus-collides-with-lorry-in-accident-one-dead-6-injured



