சென்னை, இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழ்நாடு முதல்-அமைச்சர் ச.ஜோசப் விஜய்யின் சீர்மிகு நல்லாட்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் வழிக்காட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள சட்டப்பிரிவு 46 (1) ன் கீழ் உள்ள 673 திருக்கோவில்களுக்கும் மற்றும் 46(2) ல் உள்ள 84 திருக்கோவில்களுக்கும் பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்கள் நியமனம் செய்வதற்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. அறங்காவலர் நியமன அறிவிப்பு. திருக்கோவில்கள் விவரம், தகுதிகள், விண்ணப்ப படிவம் ஆகியவை ( இத்துறையின் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை இணைய வழியில் (online) பூர்த்தி செய்தோ அல்லது பதிவிறக்கம் செய்தோ உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் அல்லது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ, விரைவஞ்சல் (Speed Post) மூலமாகவோ சம்பந்தப்பட்ட இணை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்பலாம். 12.08.2026 அன்று மாலை 5.45 மணிக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஏற்கனவே, சட்டப்பிரிவு 46(3)ன் கீழ் உள்ள 220 திருக்கோவில்களுக்கும், நிர்வாகத்திட்டம் உள்ள 35 திருக்கோவில்களுக்கும் பரம்பரை முறை வழி சாரா அறங்காவலர்கள் நியமனம் மற்றும் 14 மாவட்டங்களில் மாவட்டக்குழு உறுப்பினர்களின் நியமனத்திற்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கபட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/applications-are-invited-for-the-appointment-of-trustees-for-757-temples




