தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான பிரியா பவானி சங்கர் தற்போது தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் நடித்து அசத்தி வருகிறார். அருள்நிதியுடன் இணைந்து அவர் நடித்துள்ள 'டிமாண்டி காலனி 3' படம் விரைவில் திரைக்கு வருகிறது. இதுகுறித்து பிரியா பவானி சங்கர் கூறுகையில், "நான் பெரியளவில் படங்கள் ஒப்புக் கொள்வது கிடையாது. காரணம், தனித்துவமான கதைகளில் நடித்து ரசிகர்களை ஈர்த்து வருகிறேன். எனக்கு பெரிய பொறுப்பு இருப்பதாகவே கருதுகிறேன். எனவேதான் ஒவ்வொரு படத்தையும் மிகவும் கவனமாகக் கையாளுகிறேன். திரைப்பயணத்தில் ஒவ்வொரு அடியையும் மிகவும் கவனமாக எடுத்து வைத்து வருகிறேன். என் படங்களை குடும்பத்துடன் பார்த்து ரசிக்க வேண்டும். அதுதான் என் விருப்பம். அதில் இருந்து நான் மாறமாட்டேன்” என்று தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/iuvvoru-patthaiyum-migavum-gavanamagak-kaiyalgiren-priya-bhavani-sankar




