சென்னை, நடிகை ஆயிஷா கான், சமூக வலைதளங்களில் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது. ‘கனவு’ என பதிவிட்ட ஆயிஷா கான் வெள்ளை நிற ஆடையில் விரலில் மோதிரத்துடன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்த ஆயிஷா கான், அதற்கு “கனவு” (A dream) என்று ஒரே ஒரு வரியில் பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், ஆயிஷா கானுக்கு ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக நினைத்து, அவருக்கு வாழ்த்துகளை தெரிவிக்க தொடங்கினர். வைரலான புகைப்படங்கள் ஆயிஷா கானின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, மில்லியன் கணக்கான லைக்குகளை பெற்றது. இதனால் அவரது திருமணம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது. உண்மை என்ன? இந்நிலையில், இந்த புகைப்படங்கள் உண்மையான நிச்சயதார்த்த நிகழ்வை சேர்ந்தவை அல்ல என்பது தெரியவந்துள்ளது. அவை ஒரு நகை நிறுவனத்திற்காக எடுக்கப்பட்ட விளம்பர புகைப்படங்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனால், உண்மையில் நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக நினைத்து வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள், விளம்பர படப்பிடிப்பு என்பதை அறிந்து ஆச்சரியமடைந்துள்ளனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/cinema/cinemanews/is-ayesha-khan-engaged-truth-behind-dhurandhar-fames-viral-proposal-pictures




