சென்னை, டெல்லியில் இளைஞர்களுடன் சேர்ந்து சேர்ந்து போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சினர் மற்றும் ராகுல் காந்தியைக் கண்டித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் சென்னையில் போராட்டம் நடத்தப்பட்டது. இது தொடர்பாக நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; "வினாத்தாள் முறைகேட்டிற்கு எதிராகப் போராடுகிறோம்" என்ற போர்வையில், தேச ஒற்றுமையை சீர்குலைக்க முயலும் சமூக விரோதிகளுடன் கைகோர்த்துக் கொண்டு, தேசத்தின் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியைக் கண்டித்து, தமிழக பாஜக சார்பாக இன்று தமிழகக் காங்கிரஸ் கமிட்டியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிடும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மாணவர்களின் நலன் என்று வந்து விட்டால், அனைத்து அரசியல் வேறுபாடுகளையும் ஓரம்கட்டி வைத்து விட்டு, களத்தில் இறங்கி பிரச்சினைகளுக்கு தீர்வு காணத் துடிக்கும் ஒரே கட்சி பாஜக மட்டுமே. நாட்டின் தூண்களாகிய இளைஞர்களின் எதிர்காலத்தை வைத்து அரசியல் செய்யுமளவிற்கு நாங்கள் தரம் தாழ்ந்து போகவில்லை. ஆனால், அரசியலில் “Field Out” ஆன காங்கிரஸ் போன்ற கட்சிகள், மாணவர்கள் போராட்டத்தை கலவரமாக மாற்ற நினைப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மாணவர்கள் போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவுவதை ஆதரிக்கும் காங்கிரசின் வெறுப்பரசியலை ஊக்குவிப்பது பேராபத்தானது என்பதை உணர்த்தும் குறியீடு தான், தமிழக பாஜகவின் இன்றைய முற்றுகைப் போராட்டம். இப்போராட்டத்தில் பெருந்திரளாகக் கலந்து கொண்டு, காங்கிரசாரை கதிகலங்க வைத்த தமிழக பாஜகவின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் எனது நன்றிகள்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/congress-attempting-to-disrupt-the-nations-public-peace-nainar-nagendrans-allegation




