சென்னை, பொங்கல் வேட்டி-சேலை திட்டத்தை முடக்கி நெசவாளர்களைக் கண்ணீரில் ஆழ்த்துவதா? - தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம். இது தொடர்பாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;- 3 லட்சம் நெசவாளர் பொங்கல் இலவச வேட்டி-சேலை உற்பத்திக்கு ஜூலை மாதமே அனுமதி வழங்கப்படுவது வழக்கம். ஆனால், பொங்கலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், 1.72 கோடி வேட்டி-சேலைகளை உற்பத்தி செய்ய இன்னும் அனுமதி தராமல் காலம் கடத்தி வருகிறது தவெக அரசு. தற்போதைய அரசின் மெத்தனத்தால் 3 லட்சம் நெசவாளர் குடும்பங்கள் வேலையின்றி தவிக்கின்றன. கூட்டுறவுச்சங்கங்கள் புதிய ரகங்கள், ஜரிகை வேட்டிகள் என்ற பெயரில் தேவையற்ற விளம்பரங்களை முன்னிறுத்தி, ஏற்கனவே நெசவாளர்கள் உற்பத்தி செய்துள்ள துணிகளை கொள்முதல் செய்ய மறுப்பது அநீதியாகும். முறையான திட்டமிடல் இல்லாத அரசின் கொள்கைகளால் கூட்டுறவுச்சங்கங்கள் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. நடைமுறைக்கு சாத்தியமில்லாத அறிவிப்புகளை விடுத்து நெசவாளர்களின் வாழ்வாதாரத்துடன் விளையாடுவதை தவெக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். நடவடிக்கை எனவே, முதல்-அமைச்சர் விஜய் அரசு உடனடியாக நூல் கொள்முதலை முடித்து, உற்பத்தி ஆணையை வழங்கி, 3 லட்சம் குடும்பங்களின் பொங்கல் பண்டிகையை சிதைக்காமல் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/nayinar-nagendran-slams-tamil-nadu-govt-over-pongal-vetti-saree-scheme



