நீதிமன்றம் உத்தரவு தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஊழலை ஒழிக்கும் உத்தம ஆட்சி போல வேடம் போட்ட த.வெ.க. அரசின் முகத்திரையை கிழித்து தொங்கவிட்டுள்ளது நீதிமன்றம். ஆட்சிக்கு வந்தவுடனே அரசு வக்கீல் நியமனத்தில் கட்சி நிதி வசூல் பண்ண தொடங்கிவிட்டது த.வெ.க. அரசு என பல புகார்கள் எழுந்தன.சமீபத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வக்கீல் நியமனங்களுக்கு ரூ.15 லட்சம் வரை லஞ்ச பேரம் நடத்திய த.வெ.க. நிர்வாகி அனீஸ் என்பவரது அதிர்ச்சி ஆடியோ வெளியானது. அது தொடர்பாக ஜெகன் ராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டு மதுரைக் கிளை த.வெ.க. அரசை நன்றாய் வெளுத்துள்ளது. தூய சக்தி அல்ல "லஞ்சம் கொடுத்து வக்கீலாக வர வேண்டுமா?" என்றும் "இவர்கள் நாட்டை காப்பாற்றுவார்களா அல்லது சட்டத்தைப் பாதுகாப்பார்களா?" என்று கேள்வி எழுப்பி உடனடியாக இப்புகார் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூயசக்தி என கொடுத்து வந்த பில்டப்பை காப்பாற்ற லஞ்ச ஒழிப்புத் துறையை த.வெ.க.வின் கிளை அமைப்பாக பயன்படுத்தி வந்தனர். ஆனால் இன்று ஐகோர்ட்டு மதுரைக் கிளை தூய சக்தியின் லட்சணத்தை தோலுரித்து காட்டியிருக்கிறது. இவர்கள் தூய சக்தியல்ல, த.வெ.க. ஒரு திருட்டு சக்தி என்பது வெளிப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/tvk-is-not-a-force-of-purity-but-a-force-of-theft-rs-bharathi-lashes-out-தவெக-தூய-சக்தி-அல்ல-திருட்டு-சக்தி-ஆர்எஸ்பாரதி-தாக்கு




