தூத்துக்குடி, தபால் அலுவலகங்களில் குறைந்த பிரீமியத்தில் ரூ.10 லட்சம் மற்றும் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தில் இணைந்து பயனடையுமாறு தூத்துக்குடி தபால் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் தெரிவித்துள்ளார். ஆண்டிற்கு ரூ.559 பிரீமியத்தில் ரூ.10 லட்சம் விபத்துக் காப்பீடு இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தபால் துறையின் கீழ் செயல்படும் 'இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி' (IPPB) பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து ஆண்டிற்கு ரூ.559 மற்றும் ரூ.759 பிரீமியத்தில் ரூ.10 லட்சம் மற்றும் ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டுத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. சாதாரண மக்களுக்கும் விபத்துக் காப்பீட்டுத் திட்டங்களின் பலன்கள் சென்றடையும் வகையில், நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் உள்ள தபால் அலுவலகங்கள், தபால்காரர்கள் மற்றும் கிராம தபால் ஊழியர்கள் (GDS) மூலம் மிகக் குறைந்த பிரீமியம் தொகையுடன் கூடிய இக் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 18 வயது முதல் 65 வயது வரை 18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்த காப்பீட்டு திட்டத்தில் சேரலாம். விண்ணப்ப படிவம், அடையாள முகவரி சான்றின் நகல்கள் போன்ற எந்தவிதமான காகித பயன்பாடுமின்றி, தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனம் பயன்படுத்தி, வெறும் 5 நிமிடங்களில் முற்றிலும் டிஜிட்டல் முறையில் இந்த பாலிசி வழங்கப்படும். குடும்பத்தின் எதிர்காலத்தை உறுதி செய்ய உதவும் ஆண்டிற்கு வெறும் 559 மற்றும் 759 ரூபாயில் மேற்கண்ட பல்வேறு பலன்களை வழங்கும் இந்த விபத்து காப்பீட்டு பாலிசியை ஒருவர் எடுப்பதன் மூலம் எதிர்பாராமல் நிகழும் விபத்துகளால் ஏற்படும் உடல்நல நெருக்கடிகள், நிதி நெருக்கடிகள் மற்றும் உயிரிழப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து குடும்பத்தின் எதிர்காலத்தை உறுதி செய்ய இக்காப்பீடு பெரிதும் உதவும். எனவே பொதுமக்கள் அனைவரும் அருகில் உள்ள தபால் அலுவலகங்கள் அல்லது தபால்காரர்கள் மூலம் இந்த விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தில் உடனடியாக இணைந்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/accident-insurance-worth-rs10-lakh-at-a-premium-of-rs559-per-year-introduced-in-thoothukudi-postal-division




