ராமநாதபுரம், ராமநாதபுரம் மாவட்டத்தில் மனைவியை கொலை செய்த வழக்கில் கைதான நபரை சிறைக்கு அழைத்து சென்றபோது தப்பிச் சென்றவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். கைதி தப்பி ஓட்டம் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் மனைவியை கொலை செய்த வழக்கில் கைதான திருப்பதிகுமார் (வயது 41), கோர்ட்டு விசாரணைக்குப் பின் சிறைக்கு அழைத்து செல்லும்போது போலீசாரை ஏமாற்றி தப்பி ஓடினார். மீண்டும் கைது தலைமறைவாக இருந்த அவரை போலீசார் மீண்டும் பரமக்குடியில் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதி தப்பிய விவகாரத்தில் கவனக்குறைவாக இருந்த சப்-இன்ஸ்பெக்டர் தினகரன், ஏட்டு நீலாவதி ஆகியோர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/ramanathapuram-man-who-escaped-while-being-taken-to-prison-arrested-again




