இந்தூர், மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் உள்ள அர்ஜுன் பரோடா பாலத்திற்கு அருகே ரேவாவில் இருந்து இந்தூருக்குச் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றின் பின்பக்க டயர் திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்தது. டயர் வெடித்து சில வினாடிகளில் பேருந்தின் பின்பகுதியில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதையடுத்து பேருந்தில் இருந்த 5 பெண்கள் மற்றும் 21 ஆண்கள் என மொத்தம் 26 பேரும் கீழே இறங்கினர். தொடர்ந்து ஒரு சில நிமிடங்களில் முழு பேருந்தும் தீப்பற்றி எரிந்தது. சரியான நேரத்தில் அனைவரும் பேருந்தில் இருந்து இறங்கியதால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்புத்துறையினர், பேருந்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/india/26-people-escaped-after-a-private-bus-caught-fire-following-a-tyre-burst-in-indore



