காத்மாண்டு, திரிசூலி பகுதியில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய நேபாளத்தை புரட்டிப்போட்ட வரலாறு காணாத இந்த பேரழிவு நூற்றுக்கணக்கானோரின் உயிர்களை காவு வாங்கி விட்டது. நேற்று முன்தினம் வரை சுமார் 550 பேரின் பிணங்கள் மீட்கப்பட்டன. இது நிமிடத்துக்கு நிமிடம் அதிகரித்து வருகிறது. இடிபாடுகள் மற்றும் சேற்றுக்குவியலில் இருந்து மீட்கப் பட்ட உடல்கள் ஆஸ்பத்திரி பிணவறைகளில் குவிந்துள் ளன. இதனால் புதிதாக வரும் உடல்களை வைக்க இடம் இல்லாமல் ஆஸ்பத்திரி நிர்வாகங்கள் தவித்து வரு கின்றன. எனவே தற்காலிக பிணக்கிடங்குகள் உருவாக்கப்பட்டு உடல்களை சேமிக்கும் பரிதாப நிலை ஏற்பட்டு உள்ளது. அதேநேரம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட இன்னும் 2,400-க்கு அதிகமானோர் பற்றிய தகவல் இல்லை. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மாயமானவர்களில் தமிழர்கள் உள்பட 167 இந்தியர் களும் அடங்கியிருப்பதால் இந்தியாவிலும் தொடர்ந்து சோகம் நிலவி வருகிறது. மேலும் இந்திய வம்சாவளியினர் 128 பேரும் மாயமாகி இருப்பதாக மத்திய வெளியுறவு செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார். இதற்கிடையே வெள்ளம் பாதித்த பகுதிகளில் 5-வது நாளாக இன்றும் முழுவீச்சில் மீட்புப்பணிகள் நடந்து வரு கிறது. இரவு-பகலாக நடந்து வரும் இந்த மீட்புப்பணிகளில் நேபாள ராணுவத்தினர் 5 ஆயிரம் பேர் உள்பட 11 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு நிபுணர்களும் இடம்பெற்றுள்ளனர். இந்தநிலையில், மேலும் பலரது உடல்கள் மீட்கப்பட்டதால், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 800 க்கும்மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதேநேரம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட 3,000 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். இந்தநிலையில் நேபாளத்தின் திரிசூலி பகுதியில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெள்ள அபாய எச்சரிக்கையை அடுத்து பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் நோக்கி செல்கின்றனர். நேபாளத்தில் பெருவெள்ளம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது உள்ளூர் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. திரிசூலி பகுதிகயில் மீட்பு பணிக்கு பெரும் சவலாக வெள்ள அபாயம் இருக்கிறது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/world/flood-warning-issued-again-in-nepal




