செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம் (தனி), திருப்பூர் மாவட்டத்தின் தாராபுரம் (தனி) ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கும் அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அதிமுக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் வெற்றி பெற்றிருந்த மரகதம் குமாரவேல், தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற்றிருந்த சத்தியபாமா ஆகிய இருவரும் தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, விஜய் தலைமையிலான தவெக-வில் இணைந்ததால் இவ்விரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டு, இந்த இடைத்தேர்தல் களம் உருவாகி இருக்கிறது. ஸ்டாலின், விஜய், எடப்பாடி பழனிசாமி வேட்பாளர்கள் அறிவிப்பு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து போட்டியிட விரும்புபவர்கள் 3 நாள்களில் (செப்8 முதல் 10 வரை) விருப்பமனு அளிக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதன் பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தங்களது வேட்பாளர்களை முதன்முதலாக அறிவித்து தேர்தல் களத்தில் வேகத்தைக் கூட்டியிருந்தார். மதுராந்தகம் தொகுதியில் முன்னாள் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், திமுக சட்டத்துறை துணைச் செயலாளருமான ஐ.பரந்தாமன் போட்டியிடுகிறார். தாராபுரம் தொகுதியில் திமுக வழக்கறிஞர் மற்றும் மகளிர் அணியைச் சேர்ந்த எஸ்.சுகன்யா போட்டியிடுகிறார். 'அங்கிருந்துதான் அதிருப்தி தொடங்கியது'; தவெக கூட்டத்தைப் புறக்கணித்த கம்யூனிஸ்ட்டுகள்- காரணம் என்ன? மீண்டும் வாய்ப்பு இந்நிலையில் இன்று தவெக தங்களது வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல், தாராபுரத்தில் சத்தியபாமா ஆகியோர் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறது. அதிமுகவில் இருந்து தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோருக்கு மீண்டும் அதே தொகுதிகளில் போட்டியிட தவெக வாய்ப்பு வழங்கி இருக்கிறது. இந்த இடைத்தேர்தல் `எடைத்தேர்தலாக' இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதியின் வெற்றி வரலாறு என்ன என்பதைப் பார்ப்போம். மரகதம் குமரவேல் தொகுதி வரலாறு என்ன? மதுராந்தகம் செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தொகுதி மதுராந்தகம். 1952- ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தனித்தொகுதி இது. இந்தத் தொகுதியில் இதுவரை 1952, 1957, 1962 ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியும், 1980, 1989, 1991, 2001, 2011, 2021, 2026 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் அதிகபட்சமாக அதிமுக-வும், 1967, 1971, 1977, 1984, 1996, 2016 ஆகிய தேர்தல்களில் திமுக-வும் வெற்றி பெற்றிருக்கின்றன. இதில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் மரகதம் குமாரவேல் 69 ஆயிரத்து 284 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். தவெக சார்பில் போட்டியிட்ட எழில் கேத்ரின் எழில்மலை 62 ஆயிரத்து 90 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தையும், திமுக வேட்பாளர் அமுலு பொன்மலர் 59 ஆயிரத்து 838 வாக்குகள் பெற்று 3வது இடத்தையும் பிடித்திருந்தார். தாராபுரம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் தொகுதி கடந்த 1951ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1967ஆம் ஆண்டு தொகுதி தனித் தொகுதியாக வரையறுக்கப்பட்டது. முதல் சட்டமன்றத் தேர்தல் நடந்த 1951 ஆம் ஆண்டு சுயேட்சை எம்எல்ஏ வெற்றி பெற்ற நிலையில், அதன் பின் நடந்த 17 சட்டமன்றத் தேர்தல்களில் திமுக மற்றும் அதிமுக தலா 6 முறை வெற்றி பெற்றிருக்கின்றன. 1967, 1971, 1989, 1996, 2006, 2021 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் திமுகவும் 1977, 1980, 1984, 1991, 2011, 2026 ஆகிய தேர்தல்களில் அதிமுகவும் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்றிருக்கின்றன. மு க ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி தவிர 1957, 1962 ஆகிய தேர்தல்களில் தனித்தும், 2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியிலும் காங்கிரஸ் வெற்றி வாகை சூடியது. 2001ஆம் ஆண்டு அதிமுக கூட்டணியில் பாமக-வும் தாராபுரம் தொகுதியில் வெற்றி பெற்றது. கடைசியாக 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமா 81 ஆயிரத்து 100 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். திமுக சார்பில் போட்டியிட்ட இந்திராணி 64 ஆயிரத்து 373 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தையும், தவெக வேட்பாளர் கவுரி சித்ரா 46 ஆயிரத்து 438 வாக்குகள் பெற்று மூன்றாம் இடைத்தையும் பிடித்திருந்தார். இவ்விரு தொகுதிகளும் திமுக, அதிமுக, மற்றும் புதிதாக உருவெடுத்துள்ள தவெக ஆகியவற்றுக்கு இடையேயான முக்கியப் பலப்பரீட்சைக் களமாக மாறியிருக்கின்றன. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/what-is-the-victory-history-of-the-maduranthakam-and-dharapuram-constituencies




