சென்னை, 11 இடங்களில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ்.சமீரன், சென்னை பெருநகர காவல் ஆணையர் அ. அமல்ராஜ், ஆகியோர் முன்னிலையில் பங்களிப்பாளர்களுடன் நேற்று ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் மேற்கொள்ளப்பட்டது. ஏ.சி. பஸ் நிறுத்தங்கள் அதன்படி, சென்னை டி.எம்.எஸ். அண்ணாசாலை, மயிலாப்பூர் பஸ் நிறுத்தம், வடபழனி ஜவஹர்லால் நேரு சாலை, வேளச்சேரி விஜயநகர் பஸ் முனையம், வடபழனி பஸ் நிறுத்தம் அருகில் (2 இடங்கள்), சின்னமலை, ஆற்காடு சாலை, ஆலந்தூர் மெட்ரோ, எழும்பூர் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ஏ.சி. பஸ் நிறுத்தங்கள் அமைக்கப்பட இருக்கிறது. தொடர்ந்து இதுபோன்ற குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் தேவைப்படும் இடங்களில் பெருநிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் மேற்கொள்ளப்படும். சிறப்பு அம்சங்கள் என்ன? குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறை (Air Conditioned Waiting Hall) கண்காணிப்புக் கேமராக்கள் (CCTV Camera) வைபை வசதிகள் (Wi-fi facility) சாய்வு தளப் பாதை (Accessible ramp, preferably integrated with the footpath) பேருந்து வழித்தடத் தகவல்கள் (Bus Route information) மின்விளக்கு வசதி (Lighting) வெயில் தாங்கும் கூரை அமைப்பு (Puff panel roofing) உறுதியான பாதுகாப்பான கண்ணாடி (Toughened / laminated Safety glass) USB சார்ஜிங் வசதிகள் (USB charging points) முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/ac-bus-shelters-at-11-locations-in-chennai-corporation-signs-contract-to-install-facilities-with-wi-fi-charging-points-and-cctv



