அமெரிக்காவும், ஈரானும் மீண்டும் ‘தாக்குதல்’ மோடுக்குள் சென்றிருக்கின்றன. ஈரான் போரின் போக்கு ஈரான் போர் பிப்ரவரி மாதக் கடைசித் தேதியில் தொடங்கியது. ஏப்ரல் மாதத்தில் தற்காலிகப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. அதன் பிறகு, ஜூன் மாதம், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஜூலை மாதம், ஹார்முஸ் நீர்ச்சந்தியைக் கடந்த கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது ஈரான். இதையடுத்து ஈரான், அமெரிக்கா போர் மீண்டும் தொடங்கியது. அமெரிக்கா தாக்குதல் வழியாக எவ்வளவு நெருக்கடி கொடுத்தும், ஈரான் தொடர்ந்து பதில் தாக்குதல்கள் நடத்திக்கொண்டே இருந்தது. ட்ரம்ப்"ஹார்முஸ் நீர்ச்சந்தியின் பெயரை 'ட்ரம்ப் நீர்ச்சந்தி' என மாற்றிடலாமா?" - ட்ரம்ப் புது யோசனை பொருளாதார நெருக்கடி இதனால், பொருளாதார ரீதியாக நெருக்கடி கொடுக்க, கடந்த மாதம், ஈரானுக்கு எதிராக ‘ஆபரேஷன் எக்கனாமிக் அவுட்காஸ்ட்டை’ அறிவித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அதாவது, இந்த ஆபரேஷனின்படி, ஈரானுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் நாடுகள் மீது அமெரிக்காவின் இரண்டாம் கட்ட வரி விதிக்கப்படும். இதற்கும் ஈரான் அசரவில்லை. “அமெரிக்காவின் இந்த நகர்வு ஏற்கெனவே நாங்கள் எதிர்பார்த்தது. இதைச் சமாளிப்பதற்கான இரண்டு ஆண்டுகள் பிளான் எங்களிடம் உள்ளது” என்று தெரிவித்திருக்கிறது ஈரான் அரசு. இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 30), ஈரான் ஹார்முஸ் நீர்ச்சந்தியில் கண்ணிவெடிகளை விதைக்க முயலுகிறது என்று ஈரானின் லராக் தீவுகள் மீது தாக்குதல் நடத்தியது அமெரிக்கா. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானும் அமெரிக்காவைத் தாக்கி வருகிறது. ஈரானின் எச்சரிக்கை அமெரிக்கா - ஈரான் தாக்குதல் குறித்து ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்புக் கவுன்சிலின் செயலாளர் மொஹ்சென் ரெசாய் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது. மொஹ்சென் ரெசாய் பதிவுGold: 5 நாள்களில் தங்கம் விலை ரூ.6,920 குறைவு; ஏன் குறைகிறது? - இதிலும் ஒரு சூப்பர் சான்ஸ்! “உங்களுக்கு நீங்களே தோண்டிக்கொண்ட இந்தக் குழியிலிருந்து உங்களால் தப்பவே முடியாது. இந்தத் தடுமாற்றங்களால் நீங்கள் வீழ்வது மட்டுமே நடக்கும். அதுமட்டுமல்லாமல், போர்க்களத்திலும், ராஜதந்திரத்திலும், பொருளாதார முற்றுகையை எதிர்கொள்வதிலும் ஈரான் கையாளப் போகும் புதிய உத்தி - உங்கள் அதிகாரத்தின் அடித்தளத்தையே தகர்த்தெறியப் போவதை நீங்கள் விரைவில் பார்ப்பீர்கள்” என்று பதிவில் குறிப்பிட்டுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் ஈரான் போர் விரைவில் முடிந்துவிடும் என்று ட்ரம்ப் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.vikatan.com/government-and-politics/iran-issues-strong-warning-after-us-attack




