சென்னை, எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேசிய ஆளுநர், 'வளர்ச்சியடைந்த இந்தியா 2047' இலக்கை அடைவதற்கு மாணவர்கள் பங்களிப்பை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். பட்டமளிப்பு விழா எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் விமரிசையாக நடைபெற்றது. தர்மா நாயுடு கல்வி மற்றும் அறக்கட்டளையின் வழிகாட்டுதலின்படி, ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழாவில், அறங்காவலர்கள், பேராசிரியர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் குடும்பத்தினர் ஆகியோர் ஒன்றுகூடி மாணவர்களின் சாதனைகளைக் கொண்டாடினர். நிகழ்ச்சி ஒரு கண்ணியமான கல்விசார் ஊர்வலத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தலைவர் டி.துரைசாமி நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார். முதல்வர் முனைவர் சொ. அன்பழகன் அனைவரையும் வரவேற்றார். மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தி பேசிய ஆளுநர் அர்லேகர் பட்டங்கள் வழங்கி வாழ்த்திய ஆளுநர் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தினார். மொத்தம் 1,065 மாணவர்கள் தங்கள் பட்டங்களைப் பெற்றனர். அதேவேளையில், சிறப்பான கல்விச் சாதனைகளுக்காகப் பல்கலைக்கழகத் தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்த 11 மாணவர்களும், கல்வியில் சிறந்து விளங்கிய 22 மாணவர்களும் கௌரவிக்கப்பட்டனர். ஆளுநர் தமது உரையில், பட்டதாரிகள் தங்கள் யோசனைகளைத் தொழில்முனைவு முயற்சிகளாக மாற்றவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், 'வளர்ச்சியடைந்த இந்தியா 2047' என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் தீவிரமாகப் பங்களிக்கவும் ஊக்கமளித்தார். பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தின் ஆதரவு எவ்வாறு முழுமையான ஆளுமை கொண்ட பொறுப்பான குடிமக்களை உருவாக்குகிறது என்பதையும் அவர் எடுத்துரைத்தார். விழாவில் பங்கேற்ற நிர்வாகிகள் தாளாளர் ப.வெங்கடேஷ் ராஜா பட்டமளிப்பு உறுதிமொழியை வாசிக்க, பட்டதாரிகள் உறுதிமொழி ஏற்றனர். அதன்பின்னர் பட்டமளிப்புப் பதிவேட்டில் கையெழுத்திடுதல் மற்றும் தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது. இவ்விழாவில் துணைத் தலைவர் டி.பரந்தாமன், செயலாளர் டி.தசரதன், பொருளாளர் எஸ்.அமர்நாத், இணைச் செயலாளர் எஸ்.கோபிநாத், சுதர்ஷன் வித்யாஷ்ரம் இயக்குநர் டி.சரஸ்வதி, எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயக்குநர் முனைவர் எஸ்.அரவிந்த், எஸ்.ஏ. பொறியியல் கல்லூரி இயக்குநர் டி.சபரிநாத், எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் சுதர்ஷன் வித்யாஷ்ரம் தாளாளர் ப.வெங்கடேஷ் ராஜா, மற்றும் இயக்குநர்கள் முனைவர் வி. சாய் சத்தியவதி, முனைவர் கே.எஸ். பிரபாகர் உள்ளிட்ட அறங்காவலர் குழுவினர் கலந்து கொண்டனர். முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/news/tamilnadu/sa-college-of-arts-science-celebrates-graduation-governor-awarded-degrees-to-students




