பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவாகச் சுவையான வெண்டைக்காய் சாதம் செய்து கொடுக்கலாம். எளிய முறையில் தயாரிக்கக்கூடிய இந்தச் சாதம், வீட்டில் உள்ள அனைவருக்கும் ஏற்ற மதிய உணவாகவும் இருக்கும். தேவையான பொருட்கள்;வெண்டைக்காய் – 100 கிராம், உதிரியாக வடித்த சாதம் – 1 கப், கெட்டியான புளிக்கரைசல் – 1 மேசைக்கரண்டி, மஞ்சள்தூள் – ½ தேக்கரண்டி, மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் – 4, கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி, பட்டை – 2 துண்டுகள், கடுகு – 1 தேக்கரண்டி, கறிவேப்பிலை – சிறிதளவு, எண்ணெய் – 1 மேசைக்கரண்டி, உப்பு – தேவைக்கேற்ப. செய்முறை; வெண்டைக்காயை நன்றாகக் கழுவி, ஈரப்பதம் இல்லாமல் துடைத்துக் கொள்ளவும். பின்னர் நீளவாக்கில் இரண்டாகப் பிளந்து வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் வெண்டைக்காயைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கவும். வெண்டைக்காய் லேசாக வதங்கியதும் மஞ்சள்தூள், உப்பு, புளிக்கரைசல், மிளகாய்த்தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, மசாலா வெண்டைக்காய் முழுவதும் படும்படி வதக்கவும். பின்னர் தனியே எடுத்து வைக்கவும். மற்றொரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, கடுகு, காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு, பட்டை ஆகியவற்றைச் சேர்த்துத் தாளிக்கவும். தாளித்ததும் உதிரியாக வடித்த சாதம், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறவும். பின்னர் வதக்கிய வெண்டைக்காய் மசாலாவைச் சேர்த்து, சாதம் மற்றும் மசாலா நன்றாகக் கலக்கும் வரை மெதுவாகக் கிளறவும். குறைந்த தீயில் 5 நிமிடங்கள் வைத்து, அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்ததும் இறக்கிப் பரிமாறவும். விநாயகர் சதுர்த்தியில் கொழுக்கட்டை படைக்க இதுதான் காரணமா? முழு கட்டுரையைப் படிக்க, கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தவும்.
Il s’agit d’un résumé en tamoul pour une lecture rapide. Pour le reportage complet, le contexte et les mises à jour, consultez le site de l’éditeur.
Lire l'article complet
https://www.dailythanthi.com/ampstories/photo-story/okra-rice-recipe-for-lunchbox




